Payir School featured in The Hindu

Our Payir School got featured in ‘The Hindu’ – published on 26/06/18.

Click here to read the complete article

Experts from the article:

‘குழந்தைகளுக்கு இணக்கமான பள்ளிகள் நகரங்களில் மட்டுமே இருக்கும் என்பதும் ஒரு மூடநம்பிக்கைதான். இதை உடைத்து கிராமத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது ஒரு பள்ளி.

‘எனக்கு இப்படி நடந்தால்…’ என்ற பாடம் அந்தப் பள்ளியின் இரண்டாம் வகுப்புக் குழந்தைகளின் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பாடத்தில், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் நம்மை நெருங்கினால், அடிபட்டால், யாராவது நம்மை அடித்தால், பெரியவர்கள் யாராவது எதாவது செய்தால் என்பது உள்ளிட்ட அம்சங்கள் விவாதத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதன்மூலம் பாலியல் தொல்லை உட்படப் பலவற்றை ஏழு வயது குழந்தைகள்கூடப் புரிந்துகொண்டு, அது குறித்துப் பேச முன்வரும் சூழல் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேனூர் கிராமத்தில் உள்ள ‘பயிர்’ பள்ளியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை வளர்த்தெடுக்க மாலைக் கல்வி மையமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘பயிர்’ அமைப்பு. பிறகு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கான சிறப்புக் கல்வித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதையடுத்துப் பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிக்கான சுகாதாரம், உடல்நலம் தொடர்பான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. 2014-ல் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முறைப்படுத்தி ‘பயிர்’ பள்ளிக்கூடமாகச் செயல்படத் தொடங்கியது….

Click here to read the complete article